ஆதன சான்றிதழ்கள்
வீடுகள்,கட்டிடங்கள், நிலம், குடியிருப்புகள் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட அரச சொத்துக்கள்; உட்பட உள்ளூராட்சி அதிகார வரம்பிற்குள் உள்ள அனைத்து அசையாச் சொத்துக்களும் ஆதன வரிக்கு உட்பட்டவை. ஆதனத்தின் வருடாந்த பெறுமதியின் அடிப்படையில் அமைச்சர் (உள்ளூராட்சி விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்: தற்போது மாகாண சபை அமைச்சர்) நிர்ணயிக்கும் சதவீதத்தின் அடிப்படையில் வரி கணக்கிடப்படுகிறது. அனைத்து அசையாச் சொத்துக்களும் முன்கூட்டிய சபையின் ஆதனப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும். மாநகர சபை எல்லைக்குள் உள்ள அனைத்து கட்டிடங்களும் மாநகர சபை ஆதனப் பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் அத்தகைய கட்டடங்கள் மற்றும் நிலத்தின் வருடாந்த மதிப்பின் அடிப்படையில் மதிப்பீட்டு வரி கணக்கிடப்படுகிறது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
உள்ளூராட்சி மன்றத்தினால் வெளியிடப்பட்ட ஆதன வரி அறிவிப்பு (Kபடிவம்). (ஆதனவரி இலக்கம் மற்றும் சொத்து அமைந்துள்ள வீதியின் பெயர்)
செயன்முறை
1. ஆதனவரி அறிவிப்பு வெளியிடப்;படுதல்
2. பணம் செலுத்தியதற்கான பற்றுச்சீட்டு
(மூன்று பிரதி) பெறப்பட வேண்டும்.
படிவம் வழங்கப்படுதல். (ஒரு காலாண்டு
அல்லது காலாண்டுகள் அல்லது ஒரு
வருடம் காலத்திற்கானது)
3. வரி செலுத்துதல்
4. முத்திரை பொறிக்கப்பட்ட பற்றுச்சீட்டின்
மூலப்பிரதி மற்றும் ஃ அல்லது காசாளரின்
கையொப்பத்துடன் பணம் செலுத்தியதை
ஒப்புக் கொண்டு வழங்கப்படுதல்
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
முன் அலுவலக உத்தியோகத்தர்
0212211626
கட்டண விபரம்
மதிப்பீட்டு அறிவித்தலில் காட்டப்பட்டுள்ள தொகை