குடிநீர் சேவை வழங்கல்

உள்ளுராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள மக்களின் நலனுக்காக சாதாரண தொகையை விட அதிகமாக குடிநீர் தேவைகள் இருக்கின்ற போதும் அல்லது பிற விசேட நோக்கங்களுக்காக தண்ணீர் தேவைப்படும் போதும் பவுசர் மூலம் தேவையான அளவு தண்ணீரை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனை ஒரு பொதுப் பயன்பாட்டுச் சேவையாகக் கருதி நீரை வழங்குவதற்கும், கட்டணம் வசூலிப்பதற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.

செயன்முறை

1. கோரிக்கை கடிதத்தை
        சமர்ப்பித்தல் வேண்டும். 

2. முற்கூட்டியே கட்டணத்தை
        முழுமையாக செலுத்துதல்

3. நீர் விநியோகத்தினை
        பெற்றுக்கொள்ளுதல

பொறுப்பான உத்தியோகத்தர்கள்

உப அலுவலக பொறுப்பதிகாரி

ஊர்காவற்றுறை உப அலுவலகம் -

021 221 4956

நாரந்தனை உப அலுவலகம் -

 021 320 2372

எழுவைதீவு உப அலுவலகம் -

 021 314 2491

அனலைதீவு உப அலுவலகம் -

 021 320 2374

கட்டண விபரம்

√ 1000 லீற்றருக்கான
    குடிதண்ணீர்
    விநியோகக் கட்டணம்
    (பாடசாலைக்கு) ரூ.750.00 

√ 1000 லீற்றருக்கான
    குடிதண்ணீர்
    விநியோகக் கட்டணம்
    (பொதுமக்களுக்கு) ரூ.1,600.00 

√ 1000 லீற்றருக்கான ஏனைய
    தேவைக்கான தண்ணீர்
    விநியோகக் கட்டணம்
    ரூ.2000.00