ஊர்காவற்றுறை பிரதேச சபையின் இருதய ஆண்டவர் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி நிகழ்வானது 20.9.2023 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு சபையின் செயலாளர் திரு.அ.பிரதிபன் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. முன்பள்ளி மாணவர்களின் தங்கள் கைகளினால் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வினை பார்வையிடுவதற்கு உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய சபையின் செயலாளர் மாணவச் செல்வங்கள் அவர்களின் கைகளினால் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் மிகவும் சிறந்த முறையில் இருப்பதாகவும் இவ்வாறான ஆக்கங்களை உருவாக்கிய மாணவச் செல்வங்களை பாராட்டுவதுடன் இவர்களை வழி நடத்திய முன்பள்ளி ஆசிரியருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களினால் பல சிறந்த ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. பார்வையாளர்களை மிகவும் கவரக்கூடியதாக இந்த ஆக்கங்கள் காணப்பட்டன. குறித்த நிகழ்வானது மதியம் 12:30 மணியுடன் நிறைவேற்றது.


