பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஜோய்புள், இருதய ஆண்டவர் ஆகிய இரு முன்பள்ளிகளில் கற்கும் மாணவர்களுக்கு பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் செயற்திறன் பரிமாற்ற நிதியினூடான போசாக்கு துணை உணவு வழங்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு சபையின் செயலாளர் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வானது 12.08.2023 செவ்வாய்க்கிழமை முன்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய சபையின் செயலாளர் எமது மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும் அவர்களது உடல், உள வலிமை கருதியும் அவர்களுக்கு சபையின் ஊடாக சத்துமா வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. மாணவ செல்வங்கள் இந்த செயற்றிட்டத்தில் பங்கு பற்றி தமது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வுக்கான நிதி எமக்கு தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் தொடர்ச்சியாக இத் திட்டத்தினை செயல்படுத்துவது எனவும் கூறினார். அத்துடன் முன்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சபையின் செயல்பாடுகள் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.