உள்ளூராட்சி மாத நிகழ்வை முன்னிட்டு சனசமூக நிலையங்கள் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுகிடையில் அண்மையில் இடம்பெற்ற கிரிகெட் போட்டியில் அனலை தீவு மத்திய சனசமூக நிலைய அணி முதலாம் இடத்தை சுவீகரித்ததுடன் சபை அணி, காந்திஜி சனமூக நிலைய அணி என்பன முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றன.
மேலும், சனசமூக நிலையங்கள் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுகிடையில் அண்மையில் இடம்பெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலைய அணி முதலாம் இடத்தை சுவீகரித்ததுடன் சபை அணி, அனலை தீவு சனமூக நிலைய அணி என்பன முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றன. குறித்த போட்டிகள் இடம்பெற்றபோதான பதிவுகள்...






