சபையின் வரலாறு

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் வரலாறு

1. ஆரம்பம் 

ஊர்காவற்றுறை பிரதேச சபையானது 1987ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 16.04.1987ம் திகதி அன்று ஸ்தாபிக்கப்பட்டது.

1988ம் ஆண்டு முதல் 1998ம்  ஆண்டுவரை  விசேட ஆனையாளர்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ளூராட்சி  மன்றங்கள் செயற்பட்டன. இதனாலும் 1990 தொடக்கம்  1995ம் ஆண்டுக்கிடையில் பலதடவைகளில் நிகழ்ந்த இடப்பெயர்வுகளால் பிரதேச சபையின் நிர்வாகம் முழுமையாக செயற்பட முடியாதிருந்தது.

அந்த வகையில் எமது பிரதேச சபையும் ஊர்காவற்றுறையிலிருந்து நாரந்தனைக்கும் பின்னர் வேலணைக்கும் அதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கும் இறுதியாக கொக்குவிலுக்கும் என பல இடங்களில் தலைமை அலுவலகமும் சில உப அலுவலகங்களும் கொண்டு செல்லப்பட்டு இயங்கின. உப அலுவலகப் பிரதேசங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கான மட்டுப்படுதிய சேவைகளை அந்நிலையில் சபையால் வழங்க முடிந்திருந்தது. அதே வேளையில் இடப்பெயர்வு காலங்களிலும் இடம்பெயராமல் இருந்த அனலைதீவு உப அலுவலக, எழுவைதீவு உப அலுவலக மக்களுக்கும் காரைநகர் வடக்கு அலுவலக தெற்கு அலுவலக மக்களுக்கும் சேவையாற்ற முடியாமல் போயின.

இவ்வாறான இடப்பெயர்வுக் காலத்தில் எமது சபையின் விசேட ஆணையாளராக திரு.சி.ரகுலேந்திரன், திரு.ஹெக்டர் யோசப், திரு.இ.இளங்கோ அவர்களும் செயலாளர்களாக திரு.சாள்ஸ் பொன்கலன் திரு.உ.இராசதுரை, சந்திரசேகரம் ஆகியோரும் கடமையாற்றியிருந்தனர்.

மீளவும் 1996இல் சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டமையால் 1996இல் இப்பிரதேசத்துக்கு பிரதேச சபையும் மீளவந்து இயங்க ஆரம்பித்தது. உதவி அரசாங்க அதிபரினதும் ஏனைய அலுவலகங்களினதும் ஒத்துளைப்புடன் ஏனைய தினைக்கள அலுவலகங்களின் அனுசரனையுடன் பிரதேச சபையின் தொழிற்பாடுகளை மேற்கொண்ட போது 1996-1998 காலப்பகுதியில் ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.ஜெ.எக்ஸ்.செல்வநாயகம் அவர்கள் எமது சபையின் விசேட ஆணையாளராக கடமையாற்றி சபையைத் திறமையான முறையில் நிர்வகித்ததோடு சபையின் வளர்சியில் பங்கெடுத்தார்.

தொடர்ந்து 1999 ஜனவரி 29ம் திகதியில் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களின் பிரகாரம் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபை நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி எமது சபையின் முதல் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த திரு.ம.மதனராஜா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். அதன்போது சபையின் செயலாளராக திரு.கு.கணேசலிங்கம் அவர்கள் செயலாற்றியிருந்தார். தொடர்ந்து அப்பதவிக்கால எல்லையில் திரு.ஆ.அன்ரனிராசா அவர்களும் தலைவராக செயற்பட்டார்.

அவ்வாட்சிக் காலத்தில் பின்னர் உள்ளூராட்சி  தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட சூழ்நிலையில் 2011-யூலை வரை சபைச் செயலாளர்களே சபையினை நிர்வகிப்பதுடன் நிர்வாக கடமைகளையும் ஆற்றி வந்தனர். அந்த வகையில் அக்காலத்தில் சபையின் செயலாளர்களாக முறையே திரு.கு.கணேசலிங்கம், திரு.லோகநாதன், திரு.கணேசானந்தராசா மற்றும் திரு.சு.சுதர்ஜன் அவர்களும் கடமையாற்றி சபையினை சிறப்பாக வழிநடத்தியிருந்தனர். அதன் பின்னர் மீண்டும் 2011.07.23இல் இடம்பெற்ற உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் எமது சபைக்கு 05 மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர் அப்போது மீளவும் ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தலைவராக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த திரு.மருதையினர் ஜெயகாந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் சபையின் செயலாளராக திரு. சுதர்ஜன் அவர்கள் கடமையாற்றியிருந்தார். அச்சபையின் ஆட்சிக்காலமானது 2015-யூலை  வரை நீடித்ததுடன் 2015.08.01ம் திகதியிலிருந்து அடுத்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வரை சபைச் செயற்பாடுகள் அனைத்தும் செயலாளரினாலேயே கொண்டு நடாத்தப்பட்டது. தொடர்ந்தும் சபையின் செயலாளராக திரு.சுதர்ஜன் அவர்களும் பின்னர் திரு.ம.அமிர்தகுலசிங்கம் அவர்களும் சிறப்பாக செயலாற்றியிருந்தனர்.

பின்னர் 2018.02.10ம் திகதி இடம்பெற்ற கலப்பு முறையிலான உள்ளூராட்சி சபைக்கான தேர்தலில் எமது சபைக்கு 13 மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டனர். அதன்போது மீளவும் ஊர்காவற்றறை பிரதேச சபையின் தலைவராக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த திரு மருதையினார் ஜெயகாந்தன் அவர்களே தெரிவு செய்யப்பட்டார்.


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி – 07 பிரதிநிதிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 05 பிரதிநிதிகள்

தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 01 பிரதிநிதி


மேற்குறித்த வகையில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 2018.03.20 ம் திகதியியிலிருந்து ஊர்காவற்றுறை பிரதேச சபையில் தமது ஆட்சியினை தற்போது வரை நடாத்தி வருகின்றனர். சபையின் ஆட்சிக் காலம் ஆரம்பித்த காலம் முதல் 21.03.2019 வரை செயலாளராக திருமதி தர்சினி தயானந்தன் அவர்கள் செயலாற்றியுள்ளதுடன் அதன் பின்னர் 21.03.2019 இல் இருந்து சபையின் செயலாளராக திரு அழகேசன் பிரதீபன் அவர்கள் கடமையாற்றி வருகின்றார்.


2.  தூர நோக்கு

அறிவுசார் பொருளாதாரமும் அதனோடிணைந்த ஜனநாயக பன்மைத்துவமும் கொண்ட எழில்மிகு பிரதேசமாக மிளிர்தல்.

3.  பணிநோக்கு

கிராமங்களிடையே சீரிய பௌதீக உட்கட்டமைப்பை ஏற்படுத்தல், சகல பிரஜைகளினதும் குடிநீர், சுகாதார சேவைகளைப் பூர்த்தி செய்தல், முறையான திண்மக்கழிவ அகற்றல், பிரதேசத்தின் கலாசாரத்தினையும் , பண்பாட்டினையும் பேணுதல் போன்றவற்றில் தரமான சேவைகளை வழங்குதலும், பங்குபற்றுதலுடனான ஜனநாயகத்தினை அதிகரித்து கொள்ளுதலும்.

4.  பணிகள்

இது பொதுமக்கள் சுகாதாரம் , பொதுபயன்பாட்டுச் சேவைகள், பொது நெடுஞ்சாலைகள், மக்களினது ஆறுதல் வசதி, நலன் என்பவற்றின் பாதுகாப்பு , மேம்பாடு, என்பவற்றுடன் தொடர்புடைய எல்லா விடயங்களினதும் முறைப்படுத்தல் , கட்டுப்பாடு, நிர்வாகம், பொறுப்பாக்கப்பட்ட ஊர்காவற்றுறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட நிர்வாக எல்லைக்குள்ளான ஒரு உள்ளுர் அதிகார சபையாகும்.


                                          தவிசாளர்கள் விபரம்

திரு.நடராசா மதனராசா                                    -   1998 - 2002
திரு.மருதயினார் ஜெயக்காந்தன்                  -   2011 - 2015
திரு.மருதயினார் ஜெயக்காந்தன்                  -   2018 - 2023

                                     செயலாளர்கள் விபரம்

திரு.குருசாமி கணேசலிங்கம்                          -   1995      - 2004.10
திரு.இ.லோகநாதன்
                                             -   2004.11 - 2005.04
திரு.ஏரம்பமூர்த்தி கணேசானந்தராஜா
      -   2005.05 - 2010.12
திரு.சுந்தரேஸ்வரன் சுதர்ஜன்
                          -   2011.01 - 2016.12
திரு.ம.அமிர்தகுலசிங்கம்
                                  -    2017.01 - 2018.03
திருமதி.தயானந்தன் தர்சினி
                         -    2018.03 - 2019.03
திரு.அழகேசன் பிரதீபன்
                                   -    2019.03 - தற்போது வரை