திண்மக்கழிவு முகாமைத்துவம்

உள்ளுராட்சி மன்றங்களினால் வரிப்பணம் அறவிடப்படுகின்ற பிரதேசத்திற்குள் அமைந்துள்ள வீடுகளிலுள்ள கழிவுகள் மற்றும் வீதிகளில் உள்ள கழிவுகளை சேகரித்து அகற்றுதல் அந்த உள்ளுராட்சி நிறுவனத்தின் செயற்பாடுகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. வரிப்பண வலயத்திற்குள் அமைந்துள்ள வசிப்பிடமற்ற சொத்துக்களிலிருந்து மற்றும் வரிப்பண வலயத்திற்குப் புறம்பாக ஏதேனுமொரு இடத்தில் கழிவுகளை அகற்றுவதற்கு உள்ளுராட்சி மன்றங்களிற்கு சட்டத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்தகைய இடங்களில் சேருகின்ற கழிவுகளை உரிய விதத்தில் அகற்றும் செயற்பாடானது அந்த இடத்தில் வசிப்பவர்களினால் மேற்கொள்ளப்படல் வேண்டும். எனினும் அத்தகைய நபர்களுக்கு தமது வளாகத்தில் உருவாகின்ற கழிவுகளை தம்மாலேயே முகாமைத்துவம் செய்து கொள்ள முடியாதுபோகும் சந்தர்ப்பத்தில் மற்றும் அந்த கழிவுகளை உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக அகற்ற வேண்டுமெனின், அதற்காக விடுக்கப்படுகின்ற கோரிக்கையின் மீது உள்ளுராட்சி மன்றங்களுக்குப் போதுமான இயலுமை காணப்பட்டால், கட்டணங்களை அறவிட்டு அவ்விடங்களில் உருவாகும் கழிவுகளை உள்ளுராட்சி மன்றங்கள் அகற்றுதல் பொருத்தமாகும்.

செயன்முறை

1. கோரிக்கை கடிதம் பெற்றுக்
        கொள்ளல்

2. சுகாதார மேற்பார்வையாளரின்
        அறிக்கை பெற்றுக் கொள்ளல்

3. உரிய கட்டணத்தை அறவீடு
        செய்தல்

4. திண்மக் கழிவுகளை அகற்றுதல்

பொறுப்பான உத்தியோகத்தர்கள்

உப அலுவலக பொறுப்பதிகாரி

ஊர்காவற்றுறை உப அலுவலகம் -

021 221 4956

நாரந்தனை உப அலுவலகம் -

 021 320 2372

எழுவைதீவு உப அலுவலகம் -

 021 314 2491

அனலைதீவு உப அலுவலகம் -

 021 320 2374

கட்டண விபரம்

√ வசிப்பிட பாவனைக்கான இடம்
   (உரப்பை ஒன்று) மாதாந்தம்
   ரூ.400.00 (வாரத்திற்கு ஒரு முறை)

√ ஏனைய பாவனைக்கான இடம்
    மாதாந்தம் ரூ.1000.00
    (வாரத்திற்கு   இரு தடைவ)

√ உணவகம் ரூ.1,500.00

√ விசேட தேவைகளுக்கு
    உழவியந்திரம் மூலம்
    கழிவகற்றுவதற்கு
    (ஒரு தடவைக்கு)   ரூ 2,500.00

√ தொழில்சார்ந்த கழிவு ஒரு
    தட
வை  ரூ.2,000.00