வடமாகாண உள்ளுராட்சிமன்றங்களுக்கான இணையத்தள அங்குரார்ப்பணமும் மெச்சுரை வழங்கல் நிகழ்வும் -01.03.2024


வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் இன்று (01.03.2024) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்  அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இணையதளங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன.
உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக மக்கள் மயப்படுத்தும் நோக்குடன் புதிய இணையதளங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துலசேன,  உள்ளுராட்சி ஆணையாளர் எஸ். பிரணவநாதன், உதவி ஆணையாளர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இணையதள வடிவமைப்பில் ஈடுபட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் உத்தியோகஸ்தர்களுக்கு மெச்சுரை சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், கௌரவ ஆளுநர் அவர்களினால் பிரதம விருந்தினருக்கான உரை நிகழ்த்தப்பட்டது.

p3
p4

எமது கிராமத்தை பிளாஸ்டிக் கழிவுகள் அற்ற பசுமையான, அழகான கிராமமாக மாற்றி அமைப்போம்.

சபையினால் நாளைய தலைவர்களினை  உருவாக்குவோம் எனும் செயற்றிட்டத்தில் சென் ஜேம்ஸ் சன சமூக நிலையத்தின் ஊடாக கடற்கரை வீதியோரங்களில் சபையின் செயலாளர், சென் ஜேம்ஸ் நிலைய அங்கத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சபை உத்தியோகத்தர்கள் இணைந்து  மரக்கன்றுகள் நாட்டப்பட்டு மாணவர்கள் மூலம் பராமரிப்பு கூடு அமைக்கப்பட்டது . சென் மேரிஸ் கல்லூரி  வெளிப்புற மதிலில் சூழலினை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் சுவரோவியம்  பாடசாலை மாணவர்களினால் சபையின் வழிநடத்தலுடன் வரையப்பட்டது .இச்செயற்றிட்டத்தில் நாளைய தலைவர்களாக மிளிரும் மாணவச் செல்வங்கள் தமது திறமைகளினை சிறந்த முறையில் செயல்படுத்தியிருந்தார்கள். சன சமூக நிலையத்தினருக்கும் மாணவர்களுக்கும் சபையின் செயலாளரினால் நன்றி தெரிவிக்கப்பட்டது .

IMG-20240229-WA0025
web1
web2
web4
web5

 

பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் செயற்திறன் பரிமாற்ற நிதியினூடான போசாக்கு துணை உணவு வழங்கும் திட்டம்

பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஜோய்புள், இருதய ஆண்டவர் ஆகிய இரு முன்பள்ளிகளில் கற்கும் மாணவர்களுக்கு பிரதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் செயற்திறன் பரிமாற்ற நிதியினூடான  போசாக்கு துணை உணவு வழங்கும் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு சபையின் செயலாளர் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வானது 12.08.2023 செவ்வாய்க்கிழமை முன்பள்ளி மண்டபத்தில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய சபையின் செயலாளர் எமது மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும் அவர்களது உடல், உள வலிமை கருதியும் அவர்களுக்கு சபையின் ஊடாக சத்துமா வழங்கும் செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்படுகிறது. மாணவ செல்வங்கள் இந்த செயற்றிட்டத்தில் பங்கு பற்றி தமது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வுக்கான நிதி எமக்கு தொடர்ந்து கிடைக்கும் பட்சத்தில் தொடர்ச்சியாக இத் திட்டத்தினை செயல்படுத்துவது எனவும் கூறினார். அத்துடன் முன்பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு சபையின் செயல்பாடுகள் எப்பொழுதும் உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார். 

 

 

சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்வி கற்கும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு

சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்வி கற்கும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களும் முதியோர்களுக்கு அவர்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கும் நிகழ்வு அண்மையில் செயலாளர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் பொறுப்பதிகாரிகள் மற்றும் சபை உத்தியோத்தர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது

முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு

ஊர்காவற்றுறை பிரதேச சபையின் இருதய ஆண்டவர் முன்பள்ளி சிறார்களின் கண்காட்சி நிகழ்வானது 20.9.2023 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு சபையின் செயலாளர் திரு.அ.பிரதிபன் அவர்கள் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. முன்பள்ளி மாணவர்களின் தங்கள் கைகளினால் உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் இந்நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிகழ்வினை பார்வையிடுவதற்கு உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்கள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டார்கள். இந்நிகழ்வில் உரையாற்றிய சபையின் செயலாளர் மாணவச் செல்வங்கள் அவர்களின் கைகளினால்  உருவாக்கப்பட்ட ஆக்கங்கள் மிகவும் சிறந்த முறையில் இருப்பதாகவும் இவ்வாறான ஆக்கங்களை உருவாக்கிய மாணவச் செல்வங்களை பாராட்டுவதுடன் இவர்களை வழி நடத்திய முன்பள்ளி ஆசிரியருக்கும்  தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.  இந்நிகழ்வில் மாணவர்களினால் பல சிறந்த ஆக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.  பார்வையாளர்களை மிகவும் கவரக்கூடியதாக இந்த ஆக்கங்கள் காணப்பட்டன.  குறித்த நிகழ்வானது மதியம் 12:30 மணியுடன் நிறைவேற்றது.

 

புளியங்கூடல் பொதுநூலகம், பிரதேச சபை  முன்பள்ளி என்பவற்றில் பொருத்தப்பட்ட விளையாட்டு உபகரணங்கள்

செயற்றிறன் பரிமாற்ற நிதி கட்டம் 2 இன் கீழ் பிரதேச சிறார்களின் உடல் உள விருத்தியை ஏற்படுத்துமுகமாக புளியங்கூடல் பொதுநூலகம், பிரதேச சபை  முன்பள்ளி

என்பவற்றில் பொருத்தப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் தொடர்பான பதிவுகளில் சில.....

உலக சுற்றாடல் தினம்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு பிளாஸ்ரிக் பொருட்களால் கடல்மாசுபடுவதை குறைக்குமுகமாக ஊர்காவற்றுறை கடற்கரையோரம் சபைஉத்தியோகத்தர்களால் பிளாஸ்ரிக் பொருட்கள் அகற்றிய போதான பதிவுகளில் சில.....