






சபையினால் புளியங்கூடல் பொதுச்சந்தையில் நேற்றைய தினம் இடம்பெற்ற கடைத்தொகுதிக்கான அடிக்கல் இடும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளரும், சிறப்பு அதிதியாக வேலணை பிரதேச சபைச்செயலாளரும் கலந்து சிறப்பித்ததுடன் குறித்த நிகழ்வில் சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
ஊருண்டி மாயான வீதியில் LDSP நிதியில் முன்னெடுக்கப்படும் தாங்கணைச்சுவர் சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரின் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுவரும் போதான பதிவுகள்..
உலக வங்கியின் செயற்றிறன் பரிமாற்ற நிதியில் சபையின் தலைமையலுவலக வாயில் முகப்பு புனரமைப்பின் போதான பதிவுகள்
சபையினால் வழங்கும் நீர்வழங்கல், திண்மகழிவகற்றல் சேவைகளினை மேம்படுத்துமுகமாக உலகவங்கியின் செயற்றிறன் பரிமாற்ற நிதியில் கொள்வனவு செய்யவுள்ள நீர்த்தாங்கி மற்றும் திருத்தம் செய்து மீளமைக்கப்படும் உழவுஇயந்திர பெட்டிகள் தொடர்பான பதிவுகள்....
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கண்ணகை அம்மன் இறங்குதுறை மற்றும் ஊர்காவற்றுறை இறங்குதுறை பகுதிகளில் "கடற்கரை சுத்தப்படுத்தல் செயற்றிட்டத்தின் நடவடிக்கை திட்டம் - 2024" இனை முன்னிட்டு சபையின் உத்தியோகத்தர்களால் பிளாஸ்ரிக் பொருட்களை அப்புறப்படுத்தும் சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டபோது எடுக்கப்பட்ட சில பதிவுகள்.
உள்ளூராட்சி மாத நிகழ்வை முன்னிட்டு சனசமூக நிலையங்கள் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுகிடையில் அண்மையில் இடம்பெற்ற கிரிகெட் போட்டியில் அனலை தீவு மத்திய சனசமூக நிலைய அணி முதலாம் இடத்தை சுவீகரித்ததுடன் சபை அணி, காந்திஜி சனமூக நிலைய அணி என்பன முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றன.
மேலும், சனசமூக நிலையங்கள் மற்றும் பிரதேச சபை ஆகியவற்றுகிடையில் அண்மையில் இடம்பெற்ற கயிறு இழுத்தல் போட்டியில் தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலைய அணி முதலாம் இடத்தை சுவீகரித்ததுடன் சபை அணி, அனலை தீவு சனமூக நிலைய அணி என்பன முறையே இரண்டாம் மூன்றாம் இடத்தை பெற்றன. குறித்த போட்டிகள் இடம்பெற்றபோதான பதிவுகள்...
பகிரங்க ஏலம் - ஊர்காவற்றுறை பிரதேசசபை
ஊர்காவற்றுறை பிரதேசசபையினால் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட பொருட்கள் பகிரங்க ஏலத்தின் மூலம் விற்பனை விற்பனை செய்யப்படவுள்ளது
திகதி - 25.03.2024 (திங்கட்கிழமை)
நேரம் - காலை 10.00 மணி
இடம் - ஊர்காவற்றுறை பிரதேசசபை , தலைமை அலுவலகம்