வியாபார வரி
வரியொன்றை விதிப்பதற்கு அரசியலமைப்பின் 148 ஆவது உறுப்புரை மூலம் பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ள அதிகாரங்களை, சட்டமொன்று ஊடாக வேறு ஏதேனும் அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்குப் பாராளுமன்றத்திற்கு கிடைத்துள்ள அதிகாரத்தின் கீழ், உள்ளூராட்சி மன்றத்தின் அதிகாரப் பிரதேசமொன்றினுள் ஏதேனும் வியாபாரமொன்றை நடாத்திச் செல்கின்ற ஒருவரிடமிருந்து வரியொன்றை விதித்து அறவிடுவதற்கு, 255 ஆவது அதிகாரமான மாநகர சபைகள் கட்டளைச் சட்டம் மூலம் நகர சபைகளுக்கும் 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் மூலம் பிரதேச சபைகளுக்கும் அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் அந்த உள்ளூராட்சி மன்றங்களினால் அதன் அதிகாரப் பிரதேசத்தினுள் நடாத்திச் செல்லப்படுகின்ற வியாபாரங்கள் மீது வரியொன்றை விதித்து அறவிட முடியும் செலுத்த வேண்டிய கட்டணம் வியாபாரத்தின் தன்மைக்கேற்ப காலத்திற்குக்காலம் பிரதேச சபையினால் தீர்மானித்து வர்த்தமானியில் வெளிப்படுத்தப்படும் கட்டணம் அறவிடப்படும்.
செயன்முறை
1. உள்ளுராட்சி மன்ற நிர்வாக
எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில்
அனைத்து வியாபார
இடங்களுக்கும் சபையின்
தீர்மானத்தினை அறிவித்தலும்
விண்ணப்பப் படிவத்தை
இலவசமாக வழங்குதல்
2. பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பப் படிவங்களின்
சேகரித்தல்
3. வியாபார வரி கட்டணம்
வசூலிக்கப்படுதல்
4. முத்திரை பொறிக்கப்பட்ட
பற்றுச்சீட்டின் மூலப்பிரதி மற்றும்
அல்லது காசாளரின்
கையொப்பத்துடன் பணம்
செலுத்தியதை ஒப்புக் கொண்டு
வழங்கப்படுதல்
பொறுப்பான உத்தியோகத்தர்கள்
உப அலுவலக பொறுப்பதிகாரி
ஊர்காவற்றுறை உப அலுவலகம் -
021 221 4956
நாரந்தனை உப அலுவலகம் -
021 320 2372
எழுவைதீவு உப அலுவலகம் -
021 314 2491
அனலைதீவு உப அலுவலகம் -
021 320 2374
தொழிநுட்ப உத்தியோகத்தர்
0212211626
விடயத்துக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்
0212211626
கட்டண விபரம்
விண்ணப்பக் கட்டணம் ரூ.100.00